search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு புகழேந்தி பேட்டி"

    • பெங்களூரு புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
    • தமிழ், ஆங்கிலம் தவிர வேற்று மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்

    ஓசூர்,

    ஓசூரில், அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின்பு ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, கே.பி. முனுசாமி போன்ற துரோகிகள் இதுகுறித்து பேசக்கூடாது. மேலும் பொதுக்குழுவை நடத்த விடாமல் குறுக்கீடு செய்தவரும் கே.பி. முனுசாமி தான்.

    நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில், எடப்பாடி பழனிசாமி, குற்ற உணர்வின் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்கு தயக்கம் ஏற்படும் என்பதால்தான், சபாநாயகர் ஒதுக்கீடு செய்யும் இருக்கைகளை மாற்ற வேண்டும் என்று அந்த அணியினர் துடிதுடிக்கிறார்கள்.

    மொழி பிரச்சனையில், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எடுத்த இரு மொழிக் கொள்கை நிலைப்பாடு தான் ஓ பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடும் ஆகும்.

    ஆகவே 3-வது மொழி என்பதற்கும், அதை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி என்றும் பலிக்காது. தமிழ், ஆங்கிலம் தவிர வேற்று மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். முன்னாள் அ.தி.மு.க நிர்வாகிகள் ஜெயசந்திரன், ராஜேந்திர கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இலங்கை பற்றி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அவருக்கு வரலாறு தெரியாது.
    • சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே சரியாக இருக்கிறார் பழனிசாமி.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவில் குழப்பம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களே புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பர் என விதி உள்ளது.

    அப்படி இருக்கையில் அவசர அவசரமாக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசி வருகிறார்.

    கிருஷ்ணகிரியில் பேசிய அவர் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர் என்கிறார். ஒற்றை தலைமை வேண்டும் என பன்னீர்செல்வம் கூறவில்லை. 10 முறை பொது பட்ஜெட் வாசித்தவர். 3 முறை முதல்வர் பதவியில் இருந்தவர் மீது அநாகரிகமாக பேசி வருகிறார்.

    இலங்கை பற்றி பேசுகிறார். அவருக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அவருக்கு வரலாறு தெரியாது. இரட்டை இலை விவகாரத்தில் பணம் கொடுத்தது யார்?

    கிருஷ்ணகிரியில் பல கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வந்து சேரவில்லை. இது குறித்து பேசி இருக்கலாம். அதை விடுத்து சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே சரியாக இருக்கிறார் பழனிசாமி.

    பொதுநலமாக பேசி வரும் பன்னீர்செல்வம் இவரது விமர்சனங்களுக்கு பதில் கூறப்போவதில்லை.

    பொது செயலாளர் யார் என மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.அப்போது தெரியும். பன்னீர்செல்வம் அலை வீசுவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    பன்னீர்செல்வம் இன்னும் தன் கட்சிப் பணிகளை முடிக்கவில்லை. இதுவரை 40 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவர்.

    பின்னர் மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் மாநாடு போல மாவட்டம் தோறும்கூட்டங்களை பன்னீர்செல்வம் நடத்துவார். சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. காலம் தான் பதில் சொல்லும்.

    இவ்வாறு புகழேந்தி கூறினார்.

    ×