search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஞ்சை தொற்று"

    • காலணிகளை கவனமுடன் கையாள வேண்டும்.
    • காலணிகளை முடிந்தவரை உலர்வான இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.

    மழைக்காலத்தில் வெளியில் செல்லும்போது தண்ணீர், சகதி ஆகியவை காலணிகளில் படுவதால் அவை விரைவாக சேதமடையும். குறிப்பாக ஷூக்கள் மழையில் நனைந்தால், அவற்றை மீண்டும் பயன்படுத்துவது சிரமமாகும். இதை தடுக்க மழைக்காலத்தில் நாம் அணியும் காலணிகளை கவனமுடன் கையாள வேண்டும். அதற்கான சில வழிகள்:

    மழை நாட்களில் எல்லா இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். காற்றில் இருக்கும் ஈரப்பதமும் காலணிகளை சேதமடைய செய்யும். இதனால் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு காலணிகளின் மேற்பரப்புகளில் சாம்பல் மற்றும் கருப்புநிற புள்ளிகள் தோன்றும். எனவே, காலணிகளை முடிந்தவரை உலர்வான இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். காகிதங்கள் அல்லது டிஷ்யூ தாளைக் கொண்டு காலணிகளை பொதிந்து வைக்கலாம்.

    சாலையில் தேங்கும் மழைநீரில் இருக்கும் மண்ணும், சகதியும் ஷூக்களை எளிதில் அசுத்தமாக்கும். இதுபோன்ற நேரங்களில் அவற்றை பற்பசை கொண்டு எளிதில் சுத்தம் செய்யலாம். வெள்ளை நிற பற்பசையை ஷூவில் உள்ள அழுக்கான இடத்தில் பூசி, டூத்பிரஷ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு அந்த இடத்தை ஈரமான துணி அல்லது டிஷ்யூ தாள் மூலம் துடைத்து சுந்தம் செய்யலாம்.

    ஷூவை சுத்தம் செய்ய பலரும் அதிக அளவு தண்ணீரை செலவழிப்பார்கள். ஆனால், இது அனைத்து வகையான ஷூவுக்கும் பொருந்தாது. லெதர் மற்றும் மெல்லிய தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷூக்களை அதிகமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும்போது, அவை எளிதில் சேதமடையும். சிறிதளவு தண்ணீரில் சோப்பை கலந்து, அதில் துணியை நனைத்து, அதன் மூலம் ஷூக்களை சுத்தம் செய்யலாம்.

    லெதர் ஷூக்களின் வெளிப்பகுதி மட்டுமில்லாமல், அவற்றின் உள்பகுதியையும் முழுவதுமாக உலர வைக்க வேண்டும். உள்பகுதியில் ஈரப்பதம் இருந்தால், அந்த ஷூக்களை அணியும்போது பாதங்களில் கிருமித்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதுதவிர வியர்வையால் ஏற்படும் பாக்டீரியா பெருக்கமும் ஈரப்பதத்தோடு சேர்ந்து ஷூக்களில் துர்நாற்றம் வீசச்செய்யும்.

    ஷூக்களின் உள்பகுதியில் டிஷ்யூ தாளை பொதிந்து வைத்தால், அவை எளிதாக ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். அதன்பிறகு ஷூவின் உள்ளே சிறிது டால்கம் பவுடரை தூவி வைக்கலாம். வாரத்திற்கு 2 முதல் 3 முறை இவ்வாறு செய்யலாம். தினமும் ஷூவுக்கு பாலிஷ் போடுவது ஷூவை பளபளக்க செய்வதுடன், பூஞ்சை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கும்.

    ஷூக்களில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டால், உலர்ந்த பழைய பிரஷ் கொண்டு அதை முழுவதும் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். ஷூவின் அனைத்து பகுதியையும் சுத்தம் செய்வது முக்கியமானது. அதன்பிறகு நேரடி வெயிலிலோ அல்லது மின்விசிறி காற்றிலோ ஷூவை உலர வைக்க வேண்டும்.

    மழைக்காலத்தில் லெதர், கேன்வாஸ் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஷூக்களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கலாம். ரப்பர் அல்லது பி.வி.சி. பொருட்களால் தயாரிக்கப்பட்ட பிளிப் பிளாப்களை பயன்படுத்தலாம். கிராக்ஸ், பிளாஸ்டிக் ரக காலணிகளையும் பயன்படுத்தலாம். ஏனெனில், இவற்றை எளிதாக உலர வைக்க முடியும். மழைக்காலத்தில் ஹீல்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். தட்டையான கீழ்ப்பகுதி கொண்ட காலணிகளை அணிவது நல்லது.

    ×