search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு"

    • திண்டுக்கல் அருகே அஸ்வினி, கற்றாழை பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் காய்ந்து வருகி ன்றன. இதனால் விவசாயி கள் கவலையில் உள்ளனர்.
    • பூச்சி தாக்குதலை தடுக்கும் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனபட்டி:

    திண்டுக்கல் அருகே அஸ்வினி, கற்றாழை பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் காய்ந்து வருகி ன்றன. இதனால் விவசாயி கள் கவலையில் உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊரா ட்சிக்கு உட்பட்ட ஆண்டி யபட்டி, காட்டுப்பட்டி, நிலப்பட்டி, சின்னம்பட்டி, கம்பளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் அஸ்வினி, கற்றாழை பூச்சிகளின் தாக்குதலால் பருத்தி செடிகள் காய்ந்து வருகின்ற ன. இதனால் பருத்தி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    பொதுவாக பருத்தியில் வாடல் நோய், பூ மற்றும் மொட்டுகள் உதிர்தல், சப்பை கொட்டுதல் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சியான அஸ்வினி பூச்சி தாக்குதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். பருத்தி சாகுபடி நேரத்தில் தொடர்ந்து மழை பெய்வதாலோ அல்லது அதிக அளவு தண்ணீர் பாய்ச்சுவதாலோ செடிகள் நன்றாக வளர்ந்து பசுமையாக காணப்படும். அப்போது சாறு உரியும் பூச்சியான அசுவினி தாக்குதல் அதிக அளவு காணப்படும். குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சி உண்ணும்.

    இதனால் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கீழ்நோக்கி சுருண்டு விடும். தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

    குஞ்சுகள் இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை சுரக்க செய்வதால், இலைகள் பூஞ்சானத்தால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும். கம்பிளியம்பட்டி அருகே ஆண்டியப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பயிர்களில் அதிகளவில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அறுவடை நேரத்தில் ஏற்பட்ட இந்த பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ரூ.120க்கு விற்பனையான பருத்தி தற்சமயம் கிலோ ரூ.70 க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது மிகுந்த கவலையில் உள்ளனர்.

    எனவே இந்த பாதிப்புகளை சரி செய்ய வட்டார வேளாண் அதிகாரிகள் களஆய்வு நடத்தி ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×