search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர் பாட்டிலால் குத்தியவர் கைது"

    • கள்ளத்தொடர்பு தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • படுகாயமடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (30) இவருக்கு பவித்ரா (25) என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை இரவு கனகராஜ், இவரது மனைவி பவித்ரா மற்றும் கனகராஜ் நண்பர் ஜெய்கணேஷ் (30) இவரது, மனைவி துர்காதேவி (24) ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    இதையடுத்து, மறுநாள் தன் மனைவி பவித்ராவுக்கும், நண்பர் ஜெய்கணேஷ்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த கனகராஜ், பவித்ராவை அடித்து தகராறு செய்து அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர், தன் மனைவி கோபித்து செல்வதற்கு ஜெய்கணேஷ் தான் காரணம் எனக்கூறி பீர் பாட்டிலை உடைத்து ஜெய்கணேஷை மீது பயங்கரமாக குத்தி உள்ளார். இதில், படுகாயமடைந்த ஜெய்கணேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து ஜெய்கணேஷ் மனைவி துர்காதேவி, செம்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×