search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் வீடு"

    • செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து விளக்கி இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து விபரம் கேட்டறிந்தார்.

    விழுப்புரம்:

    பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் குறித்து செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர் ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து விளக்கி இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து விபரம் கேட்டறிந்தார்.

    மேலும் நிலுவையில் உள்ள வீடுகளை வரும் 15.8. 2022-க்குள் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது உதவி திட்ட இயக்குனர் (வீடுகள்) குருசாமி வட்டார வளர்ச்சி அலுவலர் (வீடுகள்) நந்தகோபாலகிருஷ்ணன் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சம்பந்தம் மற்றும் உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×