search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி பிறந்த நாள்"

    • பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஸ்பிக் நகரில் நடைபெற்றது
    • 10 கிளைகளில் கொடியேற்றும்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதீய ஜனதா கட்சி சார்பாக நாளை நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஸ்பிக் நகரில் நடைபெற்றது

    தெற்கு மண்டல் தலைவர் மாதவன் வரவேற்றார், விவசாய அணி மாநில பொறுப்பாளர் தமிழ் செல்வி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம்,அண்டை மாநில தமிழ்வளர்ச்சி பிரிவு செய லாளர் புனிதா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நாளை (17-ந் தேதி )முதல் 10 நாட்கள் சேவை தினமாக கொண்டாட கட்சி தலைமை முடிவு செய்து அறிவித்துள்ளது.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி சார்பாக கடற்கரை பகுதியில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும், 10 கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி, இளைஞர் அணி சார்பாக நடைபெறும் ரத்ததான முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொறுப்பாளரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெற்றிவேல், மகளிர் அணி தெற்கு மண்டல் தலைவி புனிதா, ஓ.பி.சி. மண்டல தலைவர் துர்க்கையப்பன், பொது செயலாளர்கள் பிரபு , மகேஷ் ,செயலாளர் பாலகுமார்,அருண்பாபு, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, வணிகர் பிரிவு துணைதலைவர் செல்லப்பன், இளைஞர் அணி செயலாளர் முனியசாமி, மகளிர் அணி பொதுசெயலாளர் லெட்சுமி மண்டல் துணை தலைவர் பொய்சொல்லான், கிளைதலைவர் முருகேசன், தரவு தளவு பிரிவு தலைவர் ராஜ்குமார், விவசாய அணி மண்டல் தலைவர் செல்வசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×