search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்த்தீனியம் செடி"

    • பார்த்தீனியத்தை ஒருங்கிணைந்த களை மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
    • மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும்போது அவற்றை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.

    உடுமலை:

    பார்த்தீனியம் மிக மோசமான களைச்செடி. விளைநிலங்களில் பரவி, விவசாயத்துக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.அவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,

    பார்த்தீனிய செடிகளால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கால்நடைகள் உண்ணாத களைச்செடி. எல்லா பருவ காலங்களிலும் எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடிய தன்மையுடையது. பார்த்தீனியத்தை ஒருங்கிணைந்த களை மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பொது இடங்கள் அல்லது பயிரிடாத நிலங்களில் இருக்கும் பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற வேண்டும்.

    அதற்கு ஆவாரை, அடர் ஆவாரை துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இச்செடியின் அதிக வளர்ச்சி, பார்த்தீனிய செடியை வளர விடாமல் தடுக்கிறது.மழைப்பருவம் ஆரம்பிக்கும் காலமே, மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலம். மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும்போது அவற்றை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும். பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல்தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனியத்தை வேரோடு அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    ×