search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்"

    • பூரி-காசி-அயோத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
    • சுற்றுலா ரெயில் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களுக்கு ரெயில் பயணிகள் சென்றுவரலாம்.

    திருப்பதி:

    நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரெயில்களை இயக்க, 'பாரத் கவுரவ்' திட்டம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

    பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரெயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    'இத்திட்டத்தில், ரெயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் உதவும். ரெயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணியாகும்.

    தெலுங்கானா-ஆந்திரா மாநிலத்திற்கான முதல் பாரத் கவுரவ் ரெயில் இன்று செகந்திராபாத்லிருந்து இயக்கப்பட்டது.

    பூரி-காசி-அயோத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரெயில் புறப்பட்டு சென்றது.

    இந்த ரெயில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள முக்கியமான மத, வரலாற்று மற்றும் கலாச்சார தளங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த சுற்றுலா ரெயில் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களுக்கு ரெயில் பயணிகள் சென்றுவரலாம்.

    குறைந்த செலவில் புனித இடங்களுக்கு பொதுமக்களை ரெயில்வே நிர்வாகம் அழைத்து செல்வதால் இந்த பாரத் கவுரவ் ரெயிலுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

    ×