search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாய்மர படகு சேதம்"

    • கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
    • காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். அதையும் மீறி கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.

    இந்த நிலையில் கோவளம் கடற்கரையில் நடந்து வரும் பாய்மர படகு போட்டியும், அப்பகுதி கடல் சீற்றம் காரணமாக நேற்று நிறுத்தப்பட்டது. அதையும் மீறி சில வீரர்கள் பயிற்சிக்காக கடலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். அதில் கடல் அலையில் சிக்கி ஒரு படகின் விலை உயர்ந்த பாய்மரம் கிழிந்தது. கடலோர காவல்படை வீரர்கள் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர்.

    இன்று காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது. புயல் எச்சரிக்கை இருப்பதால் போட்டி நடைபெறும் இடத்தில் கூடுதலாக கடலோர காவல்படை நீச்சல் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×