search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்"

    காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். #WomaninjuredinPakshellingdies
    ஜம்மு:

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியான ஆர்னியா கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி மீது கடந்த மே மாதம் 21-ம் தேதி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி மற்றும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த தர்ஷனா தேவி என்பவர் ஜம்மு நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மோர்ட்டார் குண்டுகளில் இருந்து வெளிப்பட்ட துகள்கள் அவரது மார்பகங்களுக்குள் பாய்ந்து அபாயகரமான காயத்தை ஏற்படுத்தி இருந்தது. இதைதொடர்ந்து அவருக்கு ஈரல் மற்றும் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டது.

    அதை சரிப்படுத்துவதற்காக கடந்த 16 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த தர்ஷனா தேவி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

    இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1,250 முறை காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் உள்பட 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #WomaninjuredinPakshellingdies 
    ×