search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவஸ்தி"

    • கொடநாடு செல்லும் சாலையில் முக்கிய சாலை வழி சந்திப்பாக ஈளடா பகுதி அமைந்துள்ளது.
    • பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    அரவேணு:

    கொடநாடு ஈளடா பகுதியில் இடிக்கப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடையை உடனடியாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் முக்கிய சாலை வழி சந்திப்பாக ஈளடா பகுதி அமைந்துள்ளது.

    இந்த பகுதியை சுற்றி தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் ,கர்சன், பட்டக்கொரை, பாரதி நகர்,காந்திநகர், கதகஹட்டி, கதகத்துறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 900 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த ஆண்டுகளில் பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நான்கு மாத காலமாகியும் இதுவரை இடிக்கப்பட்ட நாளிலிருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழையில் நனைந்தபடி பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

    எனவே அதிகாரிகள் இடிக்கப்பட்ட ஈளடா பகுதி பஸ் நிறுத்த நிழற்குடையை ஆய்வு செய்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். 

    ×