search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகூடம்"

    • பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது
    • அறிவிப்பை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலத்தூர் பகுதியில் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லட்சுமி ஹரிஹரா உயர்நிலை பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த ப்பட்டு வருகிறது. இங்கு இலத்தூர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள ஏராள மான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியின் நிர்வாகம் செய்யும் தனியார் தன்னிச்சையாக இந்த பள்ளியை மூட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பாக 2023-ம் ஆண்டுடன் இந்த பள்ளி மூடப்படுவதாகவும் ஜூன் 1-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும் பள்ளி முன்பாக அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை பார்த்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று இலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். இலத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் லட்சுமி அரிகரா உயர்நிலை பள்ளியை நிர்வாகத்தினர் மூடுவதற்கு முயற்சிப்பதை கண்டித்த தோடு இந்த பள்ளியை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறு த்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த அச்சன்புதூர் இன்ஸ் பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறை யாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள ப்படும் என்று உறுதி அளித்த நிலையில் பொது மக்கள் தற்காலி கமாக போராட்டத் தை கைவிட்டனர்.

    அதனை தொடர்ந்து இந்த பள்ளிக்கு அருகில் உள்ள இலத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் மேதின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் போராட்ட குழுவினர் கலந்து கொண் டனர். கூட்டத்திற்கு இலத் தூர் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ரமேஷ், தலைமை தாங்கி னார். ஊராட்சி துணைத்தலைவர் சண்முக வேல் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் இலத்தூர் ஆறுமுகசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சீவநல்லூர் சட்டநாதன், ம.தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் யூனியன் கவுன்சிலருமான இலத்தூர் முருகன், மூக்கன், முத்து கிருஷ்ணன், சண்முகம், சுரேஷ், மாலதி, சுப்பிரமணியன், கோபி, ராமச்சந்திரன், பண்டாரம், மாடசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவன், வக்கீல்கள் கைலாசம், காத்தபாண்டி மற்றும் இலத்தூர் ஊராட்சி உறுப்பினர்கள் கணபதி, சங்கரசுப்பு, சொர்ணலதா, ராணி, வனிதா, மாரியம்மாள், ராமலட்சுமி அம்பேத்மணி, ஊராட்சி செயலாளர் பண்டாரம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இலத்தூர் பகுதியில் சுமார் 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் லட்சுமி அரிகர உயர்நிலைப் பள்ளியை தன்னிச்சையாக மூட முயற்சிக்கும் நிர்வாகத்தினரை கண்டிப்பதோடு இந்தப் பள்ளியை எந்த காரணம் கொண்டும் மூட அனுமதிக்க கூடாது. தமிழக அரசே இந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இலத்தூர் பள்ளி மீட்புக்குழு உருவாக்கப்பட்டு அந்தக் குழு மூலம் தொடர்ந்து போராட்டம் நடத்துவது,

    இலத்தூர் பள்ளி மீட்புக்குழுவினர் இது சம்பந்தமாக விரைந்து முடிவெடுத்து இந்த பகுதியில் உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து செயல்படவும், உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முடிவில் இலத்தூர் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ரமேஷ் நன்றி கூறினார்.

    ×