search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள் அவதி"

    • மாட்டுகானூர் வழியாக பாலக்கோடு - தருமபுரி பிரதான சாலை வரை செல்லும் கிராம சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பெரிய பள்ளங்கள் சாலையில் ஏற்பட்டுள்ளது.
    • இந்த சாலையில் செல்பவர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், சோகத்தூர் பஞ்சாயத்தில் உள்ள ரெட்டிஅள்ளி, சவுளுப்பட்டி, மாட்டு கானூர் உள்ளிட்ட கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்கள் தருமபுரி நகரத்தை ஒட்டியே உள்ளது.

    இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் அதிகம் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத தால் கடந்த 10 ஆண்டுகளாக பொது மக்கள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குமாரசாமி பேட்டை ரயில்வே மேம்பாலம் முதல் மாட்டுகானூர் வழியாக பாலக்கோடு - தருமபுரி பிரதான சாலை வரை செல்லும் கிராம சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பெரிய பள்ளங்கள் சாலையில் ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது.

    மேலும் மழைக்கால ங்களில் மழைநீர் சாலையில் உள்ள குழிகளில் தேங்குவதால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை.

    இதனால் பலமுறை விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் தெருக்களில் உள்ள இணைப்பு சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் பழுதடைந்த சாலையால் அவதியடைகின்றனர்.

    மேலும் இந்த கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகமும் முறையாக இல்லை.

    இதனால் குடிநீர் எடுத்துவர 2 கிலோமீட்டர் தூரமுள்ள குமாரசாமி பேட்டைக்கு வந்து தண்ணீர் எடுத்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. சாலை மற்றும் தெருக்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.

    மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது.

    கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுடுகாடுக்கு செல்லும் பாதையும் குறுகலாகவும்,குண்டும், குழியுமான மண்சாலையாக உள்ளது. மேற்கண்ட இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் ரெட்டி அள்ளி, சவுளுபட்டி, மாட்டு கானூர் கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்ட மக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    ×