search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த சோதனை"

    • விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
    • அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு எட்டு மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் வாகன சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வாகனங்களும் ,புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் எல்லை சாலைகளிலும் சென்னையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் சாலைகளிலும் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் சாலைகளிலும் மற்றும் சென்னை திருச்சி தேசிய 4 வழி சாலைகளிலும் அனைத்து வாகனங்களும்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    திண்டிவனம் ஏ .டி. எஸ். பி தலைமையிடம் செஞ்சியில் டிஎஸ்பி தலைமையிலும் விழுப்புரத்தில் பார்த்திபன் தலைமையில் வாகன தணிக்கை செய்யப்பட்டது.குறிப்பாக விழுப்புரம் டி.எஸ்பி. பார்த்திபன் தலைமையில் நள்ளிரவு 12 மணி அளவில் சிக்னல் சந்திப்பிலும் அதனைத் தொடர்ந்து 2 மணி அளவில் கண்டமங்கலம் அருகிலும் 4 மணி அளவில் முகையூர் என்ற இடத்திலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்திலும் வாகன தணிக்கை செய்யப்பட்டது

    ×