search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரோட்டா கடைக்கு சீல்"

    • பன் புரோட்டா கடை ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்து இருந்தனர்
    • பன் பரோட்டா கடையில் சுகாதாரமற்ற முறையில் ரோட்டில் உணவுகள் தயாரித்து விற்பது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை சாத்தமங்கலம்-ஆவின் சந்திப்பில் சிக்னல் அருகில் "பன் பரோட்டோ" கடை இயங்கி வருகிறது. வாகன நெரிசல் மிகுந்த இந்த பகுதி தூசி மண்டலமாக காட்சி அளிக்கும். ஆனாலும் உணவு பிரியர்கள் இந்த கடையில் அலைமோதுவார்கள்.

    இங்கு சுகாதாரமற்ற முறையில் பரோட்டா மற்றும் உணவுகளை தயாரித்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினார்கள்.

    அப்போது பன் பரோட்டா கடையில் சுகாதாரமற்ற முறையில் ரோட்டில் உணவுகள் தயாரித்து விற்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்ததாக பன் பரோட்டா கடைக்கு நோட்டீஸ் கொடுத்தனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    விசாரணையில் சாலை யோரத்தில் பெட்டிக்கடை நடத்துவதற்காக அனுமதி பெற்று நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் பல ஆண்டுகளாக பன் பரோட்டா கடை நடத்தி வந்துள்ளனர் .

    மதுரை பன் புரோட்டா கடை ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்து இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    மதுரை நகரில் முக்கிமான சாலை மற்றும் தெருக்களில் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் இயங்கி வருகிறது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பதால் பொதுமக்களின் உடல்நலம் கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே அதிகாரிகள் இதுதொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×