search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனைப் பொருள் அங்காடி"

    • தென்காசி மாவட்டத்தில் அதிகமான பனை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
    • பனை பொருட்களை விற்பனை செய்வதற்கு தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    தென்காசி:

    தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்ட மைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் பொருளாளர் சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் ஜான் டேவிட், தெற்கு மாவட்ட துணை செயலாளர் மோகன், தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார் ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை சந்தித்து தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளே பனை பொருள் அங்காடி தொடங்குவதற்கு அனுமதி யும், இடமும் தர வேண்டும் என்று மனு அளித்தனர்.

    அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் அதிகமான பனை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கு இவர்கள் உற்பத்தி செய்யும் பதனீர், கருப்பட்டி, கற்கண்டு, நுங்கு, பனைநார் மற்றும் பனையில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும் இவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உட்பட்டு இந்த தொழிலை கைவிட்டுப் போகும் நிலையில் இருந்து வருகிறார்கள்.

    இயற்கை நிறைந்த பனைத்தொழிலை ஊக்கு விப்பதற்கும், பனை பொருள் தயாரிப்பவர்க ளுக்கு வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கும் ஏதுவாக தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளே தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பனை பொருள் விற்பனை அங்காடி தொடங்குவதற்கு அனுமதி யும், அதற்கான இட வசதியும் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.

    ×