search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடு சாவு"

    • மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தபோது விபரீதம்
    • கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அருகே உள்ள வேப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. விவசாயி, இவர் தனது பசுமாட்டை அருகிலுள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் சிறிது நேரம் கழித்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி பசுமாட்டின் மீது விழுந்ததில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த் துறையினர் பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் பசுமாட்டை பரிசோதனை செய்தனர்.

    • ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
    • மின்கம்பி அறுந்து கொட்டைகையின் மேல்விழுந்தது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி சுற்றுவட்டார பகுதிகளான அகவலம், ரெட்டிவலம், கீழ்வீதி, மகேந்திரவாடி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    இதில் மகேந்திரவாடி கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான பசுமாடு அவரது வீட்டருகில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது.

    நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தபோது உயர்அழுத்த மின்கம்பி அறுந்து கொட்டைகையின் மேல்விழுந்தது. பசுமாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    • யானை ஆக்ரோஷமாக முட்டியதில் பசு மாடு படுகாயம் அடைந்து உயிரிழந்தது .
    • பசுமாட்டிற்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபு(வயது 40).

    இவருக்கு சொந்தமான பசு மாட்டை இரவு வந்த காட்டு யாணை ஆக்ரோஷமாக முட்டியதில் பசு மாடு படுகாயம் அடைந்து உயிரிழந்தது . பசுமாட்டிற்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    மேலும் ஈச்சம்பள்ளம், கரகூர், சீரியம்பட்டி, சொக்கன்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தினதோறும் வனத்திலிருந்து வெறுயேரும் காட்டு யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது மட்டுமின்றி பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வருகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடர்ந்த காட்டுக்குள் யானையை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×