search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி திருவிழா"

    • நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது.
    • 9-ம் நாளான இன்று மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுரு நாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமைக்கமிட்டி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முப்பிடாறி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் இரவில் சிறப்பு பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 7-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு இன்னிசை கச்சேரி, நள்ளிரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ முப்பிடாறி அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் சிவகுருநாதபுரம் காமராஜ் சிலம்பாட்ட குழுவினர் சிலம்பாட்டம் நடந்தது. 8-ம் திருநாளான நேற்று இரவு 7 மணிக்கு வில்லிசை, அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்தில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து மெல்லிசை கச்சேரி நடைபெறும்.

    ×