search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்களுக்கு பிரசாதம்"

    • 9 நாள் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    போளூர்:

    போளூர் அடுத்த முருகா பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், ஸ்ரீ முருகாத்தம்மன் திருக்கோவில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில்களில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் 9 நாள் அபிஷேகமும் தீபாராதனையும் செய்து பிள்ளையார் கோவில் அருகில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சரஸ்வதி பூஜையன்று கிராம தேவதை ஸ்ரீ அருள்மிகு முருகாத்தம்மன் சாமியை அலங்கரித்து சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போளூர் வழக்கறிஞர் தினகரன் ஸ்ரீ முருகாத்தம்மன் கோவில் கமிட்டி தலைவர் மு.சா. வீரபத்திரன் என்கிற தேசபக்தன் முன்னாள் மணியம் வி.எஸ். ராஜாமணி ராவ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பரமசிவம், ஊர் நாட்டாமை காரர்கள் ஆரிமுத்து, பெரியதம்பி, சங்கர், பன்னீர்செல்வம் முனிரத்தினம், கிருஷ்ணன், நடராஜன் மற்றும் சேகர், மதுரைவீரன்,பாபு, வைடூரியம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் சுவாமிக்கு ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல் கபிலர்மலை யில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில்‌ உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோயில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோயில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரநாதர் மலை யில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள முருகன் கோவில்க ளில் ஆவணி மாதம் கிருத்திகை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

    ×