search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்கவாதத்தால்"

    • திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் ஆஸ்பத்திரியில் நடந்தது
    • 56 வயதானவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து சுமார் 50 கடல் மைல் தூரத்தில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 56 வயதானவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை இந்திய கடலோர காவல் படையின் உதவியோடு திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் சோதனை செய்தபோது மூளை மற்றும் நலனை பாதுகாக்கும் மென்படல சவ்வுக்கும் இடையே ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப் பட்டது. இந்த நிலை வலையனையமிடை ரத்தக்கசிவு என மருத்துவ ரீதியாக அறியப்பட்டது.

    மூளையை சுற்றியுள்ள மூளை முள்ளந்தண்டு திரவத்தில் கசியும் ரத்தம் சேர்வது உள் மண்டை அழுத்தம் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். இது நோயாளியின் ஆரோக்கி யத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். குருதி நாள வீக்கத்தினால் ஏற்படும் கிழிசல் ரத்தக்கசிவின் மிக பொதுவான காரணமாகும்.அதைத்தொடர்ந்து அவருக்கு மண்டையோட்டை திறந்து செய்யப்படும் கிரானியோட்டமி என்ற அறுவை சிகிச்சை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஆலோசனை யின்பேரில் 5 மணி நேரம் நடந்தது. அதன் பிறகு அவர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். அவருக்கு அறுவை சிகிச்சையையும் மற்றும் பின் தொடர் சிகிச்சையையும் மேற்கொண்ட குழுவில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் நிபுணர்கள் டாக்டர்கள் அபு மதன், என்.எஸ். நவாஸ், பாபி ஐப், நரம்பியல் மயக்கவியல் துறையின் டாக்டர் சுசாந்த் பி, உடல் மருத்துவத்துறை நிபுணர் டாக்டர் ேஜ.நித்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    ×