search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை அ.தி.மு.க."

    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
    • சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு நெல்லை நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் தலைமையில் நெல்லை மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது சுதாபரமசிவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை நிச்சயம் தேவை. அது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும். 1.5 கோடி தொண்டர்களின் விருப்பமும் அதுதான். பொது–மக்களும் அதைத்தான் விரும்புகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் 52 பொதுக்குழு உறுப்பினர்களும், 9 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்கின்றனர். 4 வருடம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தினார். எனவே அவர் தலைமையில் ஒற்றை தலைமை அமைந்தால் தான்அ.தி.மு.க. வலுவானதாக அமையும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஒரே எதிரியாக தி.மு.க.வை நினைத்தார்கள். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க.வை எதிரியாக நினைக்கிறார்.எனவே அவருக்கு நாங்கள் வலு சேர்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், பாளை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×