search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் உற்பத்தி"

    • தொழில் மூலம் நேரடியாக மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
    • தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பினாலான உற்பத்தி வருவாயும் பாதிக்கப்படும்.

    கோவை:

    தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் 600-க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் நூற்பாலைகள் இயங்கி வருகிறது.

    அதிலும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன.ஒபன் எண்ட் நூற்பாலைகளில் இருந்து தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதுதவிர பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தொழில் மூலம் நேரடியாக மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, கழிவு பஞ்சின் விலையை குறைக்க வலியுறுத்தி, இன்று முதல் ஒபன் எண்ட் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒபன் எண்ட் மில்களும் இன்று மூடப்பட்டிருந்தது. அங்கு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.

    இந்த போராட்டமானது வருகிற 30-ந் தேதி வரை நடக்க உள்ளதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து கழிவு பஞ்சாலை உரிமையாளர் சம்பத்குமார் கூறியதாவது:-

    முதல்ரக பஞ்சு விலையில் 60 சதவீதம் கழிவுபஞ்சு விலையாக விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதை விட கழிவு பஞ்சு விலை அதிகமாக உள்ளது.இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இது இந்தொழிலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது

    மேலும் மின்கட்டணத்தில், நிலைகட்டத்தை பல மடங்கு தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதுவும் மிகப்பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது எனவே மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதனால் தினமும் ரூ.40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தப்படும். தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பினாலான உற்பத்தி வருவாயும் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    ×