search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் மட்டம் உயர்வு"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த நில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
    • நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் நீர் மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த நில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் நீர் மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 128 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலையில் 128.30 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 2150 கன அடி. தேனி மாவட்ட குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக 1667 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4330 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டமும் கடந்த 2 நாட்களாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரமுள்ள அணையில் நீர் மட்டம் தற்போது 54.33 அடியாக உள்ளது. வரத்து 1600 கன அடி. திறப்பு 969 கனஅடி. இருப்பு 2612 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 78.39 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 14.4, தேக்கடி 8, கூடலூர் 2, உத்தமபாளையம் 1.8, வைகை அணை 1.2, வீரபாண்டி 10.6, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 5, பெரியகுளம் 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×