search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தடி நீரை உறிஞ்சும் அன்னியமரங்கள்"

    • அந்நிய மரங்கள் விதைப்பு திட்டத்தின் கீழ், அரசு எடுத்த, தவறான கொள்கை முடிவால், அந்நிய மரங்களின் வளர்ச்சி தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியது.
    • கொடைக்கானல் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் 200 ஏக்கருக்கு மேல் உள்ள மனோரத்தினம் சோலை அணைப்பகுதியில் அதிகமாக விளைந்துள்ள சவுக்கு மரங்களையும் அகற்ற வேண்டும்.

    கொடைக்கானல்:

    சோலை மரங்கள் நிறைந்த வனப்பகுதி விவசாயிகளை காக்கும் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. மனிதன், பறவைகள், விலங்குகள் மட்டுமல்லாது, அனைத்து உயிர்களுக்கும், தேவையா னதாக வனப்பகுதி விளங்கி வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில், சோலைக்காடுகளின் ஊடுருவலில் அந்நிய மரங்களான பைன், யூகலிப்ட்ஸ் மரங்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

    கடந்த காலங்களைவிட தற்போது அந்நிய மரங்களின் வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது. 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில், அந்நிய மரங்கள் விதைப்பு திட்டத்தின் கீழ், அரசு எடுத்த, தவறான கொள்கை முடிவால், அந்நிய மரங்களின் வளர்ச்சி தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியது.

    குங்கிலியம் எனப்படும் யூகலிப்ட்ஸ், சவுக்கு மற்றும் பைன் மரங்கள், கொடைக்கானல் வனப்பகுதியில், சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பெருகி, நீர் நிலைகளையும், கொஞ்சம் கொஞ்சமாக, வறட்சி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் உள்ள எழும்பள்ளம் ஏரி புல்வெளி உற்பத்தியில் பெருகிவரும் சவுக்கு மரங்களால் பசும்பொன்வழிகளும் அழியும் நிலை ஏற்பட்டு ள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மலை கிராமங்களில் தங்கள் வாழ்வாதாரத்தை நோக்கி குடி வந்த மன்னவனூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையாக அமைந்த புல் வெளிகளின் ஊடே, 7 சதுப்பு நிலங்களின் பள்ளங்களை தடுத்து விவசாய பாசனத்திற்காக அமைத்ததுதான் எழும்பள்ளம் ஏரி.

    பழங்காலத்தில் ஏரியை சுற்றி புல்வெளிகள் மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகு சமவெளிகளில் சீமைக்கருவேலம் பேராபத்தாக இருந்து வருவது போல் மலைப்பகுதிகளுக்கு நீர் ஆதாரத்தை உறிஞ்சும் அந்நிய வகை மரங்கள் விவசாயத்தை அழிக்கும் பேரழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சவுக்கு மரங்களின் பரவல் எழும்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்துள்ளது.

    மன்னவனூர் எழும்பள்ளம் புல்வெளி மற்றும் ஏரி நீர் ஆதாரம் என இரண்டும் சுற்றுச்சூழலுக்கும் வன உயிரினங்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு அப்பகுதி அத்தியாவசியமாக உள்ளது. பரந்து விரிந்து பச்சை உடை அணிந்தது போல் பசுமை போர்வை போர்த்திய புல்வெளிகளு க்கு இடையே அமைந்துள்ள ஏரி பசுமையை நாடிவரும் சுற்றுலா பயணிகளின் பார்வையில் காண்பதற்கு கண்கவர் வண்ணமாக காட்சி அளிக்கிறது.

    வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றும் வனத்துறையினர் வருவாய் நீலங்களை ஒட்டி அமைந்துள்ள நீர் ஆதாரத்தை உறிஞ்சும் அந்நிய மரங்களை அகற்றுவது எப்போது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நீதிமன்றத்தின், கண்டிப்பான தொடர் அறிவுறுத்தலுக்கு பின்னர் வனத்துறை மன்னவனூர் பகுதியில் பாரிக்கோம்பை என்ற வன எல்லைப்பகுதிகளில், 50 ஹெக்டேர் அளவுக்கு சவுக்கு மரங்களை அகற்றி சோலை மரக் கன்றுகளை நடவு செய்துள்ளனர். தற்போது அந்நிய மரங்களை வனத்துறை அகற்ற தொடங்கி உள்ளது. இது விவசாயிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும் வருவாய் பகுதியான மன்னவனூர் எழும்பள்ளம் ஏரியை சுற்றியுள்ள புல்வெளிகளில் அன்னிய மரங்களை அகற்றி புல்வெளிகள் அழியாமல் சுற்றுச்சூழல் மாசு படாமல் பாதுகாக்க, வருவாய்த்துறை முன்வர வேண்டும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கி ன்றனர்.

    முற்காலத்தில் மன்னவனூர் எழுபள்ளம் புல்வெளி எப்படி இருந்தது என்று புகைப்படங்களிலும் காணொளிகளில் மட்டுமே காண முடியும் என்ற நிலை உருவாகி விடும் என்பது இப்பகுதி மக்களின் அச்சமாக உள்ளது. மன்னவனூர் சூழல் சுற்றுலா தலமாக ஏற்கனவே இயங்கி வருவதையும் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இயற்கை புல்வெளிகளை காண சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு வரவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அனைவரும் இணைந்து, புல்வெளிகளை காக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடம் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்ற போது அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரிவான முதல் கட்ட ஆய்வுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதே போல் கொடைக்கானல் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் 200 ஏக்கருக்கு மேல் உள்ள மனோரத்தினம் சோலை அணைப்பகுதியில் அதிகமாக விளைந்துள்ள சவுக்கு மரங்களையும் அகற்ற வேண்டும்.

    மேலும் இவ்வகை மரங்களை அகற்றும் பணிகளை விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து செய்ய இருக்கும் சூழலில் அவர்களுக்கு இழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அப்பணிகளை அவர்களுக்கு ஒப்படைத்தால் சிறப்பாக செய்து முடிப்பார்கள். சுற்றுச்சூழலையும், குடிநீர் ஆதாரத்தையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சி னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ×