search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்"

    தோள்பட்டை காயத்தால் கேன் வில்லியம்சன் அவதிப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நேரத்தில், இது நியூசிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. #NZvBAN
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 211 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து பீல்டிங் செய்தபோது, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸ்க்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது கேன் வில்லியம்சன் 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடிக்கடி மருத்துவ உதவி எடுத்துக்கொண்டார். இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது, இன்று கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்யவில்லை.

    காயம் மேலும் வீரியம் அடையாமல் இருக்க நியூசிலாந்து அணி நிர்வாகம் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவரை பீல்டிங் செய்ய அனுமதிக்கவில்லை. நாளை கேன் வில்லியம்ஸ்-க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. அப்போதுதான் அவரது காயம் குறித்த தகவல் முழுமையாக தெரியவரும்.

    உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நேரத்தில் கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பது நியூசிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
    வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 211 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #NZvBAN
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று மழை இல்லாததால் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி தமிம் இக்பால், ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷத்மான் இஸ்லாம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 15 ரன்னிலும், முகமது மிதுன் 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.


    தமிம் இக்பால்

    தொடக்க வீரர் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் சேர்த்தார். தமிம் இக்பாலை தவிர மற்ற வீரர்கள் நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகியோரின் வேகப்பந்தை வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் முதல் இன்னிஙசில் 211 ரன்னில் சுருண்டது. டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும், நீல் வாக்னர் 4 விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.

    பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் சேர்த்துள்ளது.
    ×