search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியாய விலை கடைகள்"

    • பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பருவதனஹள்ளி முழுநேர நியாய விலை கடையில் 703 குடும்ப அட்டைகள் இருக்கின்றன.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஹள்ளி புதூர், சந்தைப்பேட்டை மற்றும் ஏர்ரகொல்லனூர் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறையின் சார்பாக புதிய பகுதி நேர நியாய விலை கடைகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் திறந்து வைத்தார்.

    பென்னாகரம் வட்டம், பருவதனஹள்ளி முழுநேர நியாய விலை கடையில் 703 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அதிலிருந்து பிரித்து பருவதனஹள்ளி புதூர் பகுதியில் 101 குடும்ப அட்டைகள் கொண்ட புதிய பகுதி நேர நியாய விலை கடையினையும், பென்னாகரம் வட்டம், மூங்கில்மடுவு முழுநேர நியாய விலை கடையில் 708 குடும்ப அட்டைகள் இருக்கின்றன.

    அதிலிருந்து பிரித்து சந்தைப்பேட்டை பகுதியில் 96 குடும்ப அட்டைகள் கொண்ட பகுதி நேர நியாய விலை கடையினையும், பென்னாகரம் வட்டம், ஏரிக்கரைசந்து முழுநேர நியாய விலை கடையில் 463 குடும்ப அட்டைகள் இருக்கின்றன.

    அதிலிருந்து பிரித்து ஏர்ரகொல்லனூர் பகுதியில் 156 குடும்ப அட்டைகள் கொண்ட புதிய பகுதி நேர நியாய விலை கடையினையும் என மொத்தம் 3 புதிய பகுதி நேர நியாய விலை கடையினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    பின்னர் பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×