search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் மழை"

    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது . சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மோகனூர், கொல்லிமலை மங்களபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது . சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசுகிறது.

    மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக மோகனூரில் 22 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கொல்லிமலை - 21, குமாரபாளையம்- 6, மங்களபுரம்- 9.2, நாமக்கல் - 2, பரமத்தி -7, ராசிபுரம் - 3 ,சேந்தமங்கலம் - 7, திருச்செங்கோடு - 6 என மாவட்டம் முழுவதும் 85.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    ×