search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நானே வருவேன்"

    • செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.


    நானே வருவேன் போஸ்டர்

    இந்நிலையில், நாளை (28-07-2022) தனுஷின் நாற்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் 'நானே வருவேன்' படக்குழுவினர் தற்போது தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் வில்லுடன் தனுஷ் நிற்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×