search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாதுராம்"

    புழல் ஜெயிலில் இருக்கும் கொள்ளையன் நாதுராமிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    கொளத்தூரில் உள்ள நகைக் கடையில் கடந்த ஆண்டு 3½ கிலோ நகை கொள்ளை போனது. ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையன் நாதுராம் தனது கூட்டாளிகளுடன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது விசாரணையில் தெரிந்தது.

    மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அங்கு கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து குஜராத்தில் பதுங்கி இருந்த நாதுராமை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவனது கூட்டாளிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

    நாதுராமை சென்னை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.


    இந்த நிலையில் இன்று காலை சிறையில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிறை அறையில் இருந்த நாதுராம் செல்போனில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    உடனடியாக அவனிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். அவனது அறையில் சோதனை செய்தபோது சிம்கார்டு, ஒரு மெமரி கார்டு, சார்ஜர் மற்றும் ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நாதுராமுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவன் செல்போன் மூலம் யார்- யாருடன் பேசி உள்ளான்? சிறைக்காவர்கள் யாரேனும் அவனுக்கு உதவினார்களா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக் எண்.2 அருகில் உள்ள பெரிய மரத்தடியில் பள்ளம் தோண்டி மூடப்பட்டு இருந்தது.

    சந்தேகம் அடைந்த சிறை அதிகாரிகள் அந்த இடத்தை தோண்டிய போது 5 செல்போன்கள், 6 சார்ஜர்கள், ரூ. 3,500 ரொக்கம் இருந்தது. அதனை கைப்பற்றினர்.

    கொள்ளையன் நாதுராமிடம் செல்போன் பறிமுதல் மற்றும் மரத்தடியில் புதைக்கப்பட்ட செல்போன்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஜெயில் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. #Tamilnews

    ×