search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்கள். சிறை"

    • சப்-கலெக்டர் உத்தரவு
    • தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் என்ற வெடிகுண்டு ஆல்பர்ட் (வயது 49). பிரபல ரவுடியான இவர் மீது தக்கலை போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனையடுத்து இவர் மேலும் குற்ற செயலில் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை சான்று பெற தக்கலை இன்ஸ்பெக்டர் மூலம் கல்குளம் தாசில்தார் வினோத் முன்னிலையில் ஆஜர்படுத்தி 1 வருடம் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல் நன்னடத்தையுடன் இருப்பேன் என பாண்டு பத்திரத்தில் கையொப்பம் இட்டு உறுதியளித்திருந்தார்.

    இந்த உறுதியை மீறும் வகையில் மறு மாதமே போலி மதுபாட்டில் ஒரு வாகனத்தில் கடத்தி கொண்டு போகும் போது மார்த்தாண்டத்தில் வைத்து மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட் டார்.

    இதனையடுத்து நன்ன டத்தை உறுதியை மீறி மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார். சப்-கலெக்டர் விசாரணைக்கு பிறகு ஆல்பர்ட் குற்ற வழக்கில் ஈடுபட்டு நன்னடத்தையை மீறியது தெரியவந்துள்ளது.

    எனவே 268 நாட்கள் ஆல்பர்ட்டை சிறையில் அடைக்க பத்மனாபபுரம் உட்கோட்ட நடுவரும் சப்-கலெக்டருமான கவுசிக் உத்தரவிட்டார்.

    ×