search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவிலில் சாலை"

    • கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்
    • 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசியபோது கூறியதாவது:- பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகள், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும். பணிகளில் ஏதாவது தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-2023 ஆண்டில் 122 கிலோ மீட்டர் சாலைப்பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்டது. அதில் 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 180 பணிகளுக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு 93 பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 93 சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×