search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்"

    • அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்ட ப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கால்நடை பராமரிப்பு,

    பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கார்த்திக் தலைமையிலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளி கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு,

    பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட விபரம், நிலுவையிலுள்ள விபரங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் விபரம், முடிவுற்ற பணிகள் குறித்தும் அரசு முதன்மைச் செயலாளர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, அவர்களை பயன்பெறச் செய்து வருகிறது. எனவே, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    முன்னதாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு பொது இ-சேவை மையத்தில், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை,

    மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர தொகை பெறுவதற்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, குறித்து அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    ×