search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்னீராக்கும் திட்டம்"

    • ரூ.10 கோடி மதிப்பில் கழிவுநீரரை சுத்தப்படுத்தி நன்னீராக்கும் திட்டம் மும்முரமாக நடக்கிறது.
    • கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கழிவுநீரை நன்னீராக்கும் திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உருவாகி வருகிறது.18 வார்டுகளுடன் பேரூராட்சி அந்தஸ்தில் இருந்த மானாமதுரை தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்று சில மாதங்களிலேயே நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இதன் வார்டுகள் 27 ஆக உயர்த்தப்பட்டன.

    நகராட்சியின் முதல் தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பின ரான தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.மாரியப்பன்கென்னடி பதவி வகித்து வருகிறார். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அலுவலகத்துக்கு தேவை யான பணியாளர்கள் நிய மிக்கப்படாமல் அலுவலக பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி அலுவலகத்தில் அனைத்து பதவிகளுக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நகராட்சி அலுவலகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வார்டுகளில் வலியுறுத்தப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் நிறை வேற்றப்பட்டு வருகிறது. அரசகுழி பகுதியில் மின்மயான தகனமேடை அமைக்கும் பணி நிறை வடையும் நிலையில் உள்ளது.

    தற்போது மானாமதுரை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார், சிமெண்ட் சாலைகள், பேவர்பிளாக்கல் பதித்தல், கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

    குறிப்பாக மானா மதுரையில் சேகரமாகும் கழிவுநீரை வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும் பெரிய அளவிலான கிணற்றுக்கு கொண்டுவந்து சேர்த்து அங்கிருந்து குழாய்கள் மூலம் கழிவுநீரை தாயமங்கலம் செல்லும் சாலையில் அமைக்கப்பட வுள்ள சுத்திகரிப்பு நிலை யத்துக்கு கொண்டு வந்து நண்ணீராக்கி அதை விவ சாய தேவைக்கு பயன்படுத்த திட்டம் தயாரித்து அதற்காக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீதிகளை சுத்தப்படுத்தும் பணி தினமும் நடந்து வருகிறது.

    இது குறித்து நகர்மன்ற தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி கூறுகையில், மானாமதுரை நகருக்கு தேவையான அனைத்து வசதிகளும் வார்டு உறுப்பி னர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை யும் நகராட்சிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்போது அனைத்து வார்டுகளுக்கும் தேவையான வசதிகள் கண்டறியப்பட்டு அதை நிறைவேற்ற நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கி பணிகள் செயல்படுத்தப்படு கின்றன.

    குறிப்பாக நகரில் தூய்மை பணி, குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. பல்புகள் தெருக்களிலும், வீதிகளிலும் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. நகரில் 1,275 பல்புகள் பொருத்தப்பட உள்ளன என்றார்.

    ×