search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைப்பந்தயம்"

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயத்தில் 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம் பிடித்தார்.
    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் 20 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சீன தைபேயை சேர்ந்த 86 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    ஆண்கள் பிரிவில் கேரளாவை சேர்ந்த இர்பான் ஒரு மணி 20 நிமிடம் 10 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். தேவேந்திரசிங் (அரியானா) 2-வது இடத்தையும் சஞ்சய் குமார் (அரியானா) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    பெண்கள் பிரிவில் கேரளாவை சேர்ந்த சவுமியா 1 மணி 40 நிமிடம் 25 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார். பிரியங்கா (உத்தர பிரதேசம்), 2-வது இடத்தையும், ரவினா (அரியானா) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    2-வது நாளான இன்று காலை 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நடந்தது. இதில் உத்தரகாண்ட் வீராங்கனை ரோஜி படேல் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 53 நிமிடம் 38 வினாடியில் கடந்தார்.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுவர்ணாகப்சே 55 நிமிடம் 36 வினாடியில் கடந்து 2-வது இடததையும், பஞ்சாப் வீராங்கனை குர்பிரீத் கவூர் 57 நிமிடத்தில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.
    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
    சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து அதிகாலையில் இந்த போட்டி தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நாளையும் ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான 10 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் 17-ந்தேதியும் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் முன்னணி வீரர்களான இர்பான், மனிஷ் சிங் ரவாத், வீராங்கனைகள் சவுமியா பேபி, ரவினா சந்தர், சாந்திகுமாரி உள்பட 200 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் தகுதி இலக்கை எட்டும் வீரர்- வீராங்கனைகள் கத்தாரில் செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெறுவார்கள்.

    இந்த போட்டியில் பங்கேற்க ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்- வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சீன தைபே, மலேசியா வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்துவதால் மற்ற நாட்டு வீரர்கள் வரமுடியவில்லை. இந்தப் போட்டி நாளையும் (16-ந்தேதி), நாளை மறுநாளும் (17-ந்தேதி) நடக்கிறது.
    ×