search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறிக்கும் மர்ம நபர்கள்"

    • மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள தெருக்களில் நடந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெருக்க ளில் நடந்து செல்லும் பெண்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. நேற்று அருகருகே உள்ள பகுதிகளில் 2 பெண்க ளிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 43). இவரது கணவர் கோவில்பூசாரி. நேற்று இரவு அக்ரகார தெருவில் உறவினர் ரெங்கநாயகி மற்றும் மகள் கார்த்தீஸ்வரி யுடன் முத்துமாரி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது.அதற்கு வழி விடுவதற்காக முத்துமாரி ஒதுங்கி நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மர்ம நபர்கள் அவ ரது கழுத்தில் கிடந்த செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்ற னர்.

    இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    அதேபோல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த வர் வேலம்மாள் (50). இவர் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள்திடீரென வேலம்மாள் கழுத்தில் கிடந்த செயினை இழுத்த னர்.

    சுதாரித்து கொண்ட அவர் செயினை இறுக்கி பிடித்து கொண்டார். இத னால் பாதி செயினை மட்டும் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள தெருக்களில் நடந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முழுமை யாக கைது செய்யப்படாமல் உள்ளனர். இதனால் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி சர்வ சாதாரண மாக நடைபெறுகின்றன. போலீசார் உரிய நட வடிக்கை எடுத்து குற்ற வாளிகளை கைது செய்து மேலும் நகை பறிப்பு சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றனர்.

    ×