search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் நுட்ப மாற்றங்கள்"

    • வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
    • இஸ்ரோ விஞ்ஞானி ராஜன் பேச்சு

    நாகர்கோவில் :

    சுங்கான்கடை, வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா வின்ஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது.

    இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் ராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இந்தியா ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, வடிவமைப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் தலைசிறந்ததொரு அறிவு மையமாக இருந்து வருகிறது. இந்தியா உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை கொண்டு உள்ளது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் இந்தி யர்களே, தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருக்கின்ற னர். நீங்கள் எந்தப் பாடப்பிரிவை எடுத்து படித்திருந்தாலும் சரி உங்களுக்கு பிடித்த துறையினை தேர்வு செய்யுங்கள். பெற்ற பட்டமே போதும் என்றில்லாமல் உங்களது விருப்பத்துறையில் இன்றளவும் உள்ள அறிவை வளர்க்க வேண்டும்.

    படித்து முடித்து விட்டோம் என்றில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் காலச் சூழலுக்கு ஏற்ப, தினம் தினம் புதிய மாற்றங்களை கொண்டு வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப விழிப்புடன் இருந்து என்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தோடு அறிவை பெருக்கும் வகையில் நேரத்தை செலவிடுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உங்களை தயார்படுத்துங்கள் நீங்களும் விஞ்ஞானி களாகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்பு கல்லூரியின் தலைவர் முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட் உறுதிமொழியை படிக்க அனைத்து பட்டம் பெற்ற மாணவர்களும் எடுத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வர் டயானா, டீன் அலெக்ஸ் ராஜா பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் பிரியா, டிவின், டெல்பின், நந்தபிரியா, சுனிதாகுமாரி, ராஜா கிங்ஸ்டன் ஆகியோர் விரிவுரையாளர்களுடன் இணைந்து செய்து இருந்தனர்.

    ×