search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொப்பையாறு அணை"

    • அணைப்பகுதியில் அதிக அளவில் குப்பைகளும் ஆடைகளுமாக நிறைந்துள்ளது.
    • ஆடைகளோடு சேர்ந்து தண்ணீர் தேங்கும் நிலையில் நீர் மாசுபாடு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

     தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மலைகளுக்கு இடையே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. தொப்பையாறு அணைக்கு நீராதாரமாக தருமபுரி மாவட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் ஏற்காடு மலையிலிருந்தும் ஆறுகள் வழியாக ஆனை மடுவு , பொம்மிடி வழியாக வேப்பாடி ஆற்றின் மூலம் தண்ணீர் தொப்பையாறு அணைக்கு வருகிறது.

    தொப்பையாறு அணையில் இருந்து வலதுபுற மற்றும் இடது புற வாய்க்கால்கள் மூலம் தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் தொப்பூர், கம்மம்பட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் சுமார் 5330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பகுதிகளை ஒட்டியுள்ள மக்கள் மற்றும் பாசனப் பரப்பை ஒட்டியுள்ள மக்கள் அதிக அளவில் கால்நடைகளின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்கு இந்த அணையையே நம்பி உள்ளனர்.

    இவ்வாறு வருடம் முழுவதும் மலைகளில் இருந்து வரும் தண்ணீரை பாசன தேவைகள் மற்றும் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி ஒரு நிலையில் சமீப காலமாக இந்த அணைக்கு குளிப்பதற்காக வரும் பொதுமக்கள் மற்றும் ஈம காரியங்கள் சடங்குகள் செய்வதற்காக வரும் பொது மக்கள் தாங்கள் அணிந்து வரும் ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை அணை பகுதியிலேயே அப்படியே வீசிவிட்டு செல்கின்றனர்.

    தற்போது அணைப்பகுதியில் அதிக அளவில் குப்பைகளும் ஆடைகளுமாக நிறைந்துள்ளது. இவை வரும் மாதங்களில் மழை பெய்யும் பட்சத்தில் அணை நிரம்பும் பொழுது இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் ஆடைகளோடு சேர்ந்து தண்ணீர் தேங்கும் நிலையில் நீர் மாசுபாடு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதற்குள் ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகங்கள் இணைந்து அணைப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளையும் ஆடைகளையும் அப்புறப்படுத்தி அணையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • இரண்டு முறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • நீர் வெளியேற்றுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    தொப்பூர்,

    தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை தொடர் மழைப்பொழிவின் காரணமாக இந்த ஆண்டு அணையின் மொத்த உயரமான 50 அடியை எட்டி இரண்டு முறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இந்நிலையில் இந்த மாதம் இரண்டாவது முறையாக தொடர் மழைப்பொழிவால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் உபரி நீராக தொப்பையாற்றில் வெளியேற்றப்பட்டது.

    இந்நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    தொப்பையாறு அணை ஜனவரி மாதம் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.

    • ஒரே ஆண்டில் தொப்பையாறு அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளது.
    • பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட செக்காரப்பட்டி பகுதியில் உள்ளது தொப்பையாறு அணை.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஒரே ஆண்டில் தொப்பையாறு அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளது.

    இந்த அணை திறக்கப்பட்டால் வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக செல்லும் அணை நீரின் மூலம் தருமபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தற்போது தொப்பையாறு அணை தனது முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. அணையின் ரம்மியமான அழகை காண அந்த பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். அணையின் நலன்கருதி நாளை அல்லது நாளை மறுநாள் அணை திறக்கப்படுவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒரே ஆண்டில் இருமுறை தொப்பையாறு அணை நிரம்பியுள்ளதால் இரு மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை தனது முழு கொள்ளவை எட்டி உள்ளதால், தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×