search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் விலை சரிவு"

    • தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
    • கடந்த 2 ஆண்டுகளாகவே கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருவதன் காரணமாக உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் விளையும் தேங்காய்க்கு பிறகு மிகுந்த நீர் பிடிப்பும் சுவையும் கொண்டதாக இப்பகுதி தேங்காய் உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் விவசாயம் காரணமாக இப்பகுதியில் விளையும் தேங்காய் நன்கு நீர் பிடிப்பும் சதைப்பிடிப்பும் கொண்டு விளங்குவது குறிப்பிடத்தக்கது.

    ஆனாலும் தற்போது தேங்காய் கொள்முதல் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருவதன் காரணமாக உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உறிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்றிற்கு ரூ.26,000 விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18,000 முதல் ரூ.19,000 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    கிலோ ஒன்றுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வியாபாரிகளுக்கு கிலோ ரூ.26க்கு விற்கப்பட்ட தேங்காய் இந்த ஆண்டு ரூ.16 முதல் ரூ.17 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இளநீர் காய் ஒன்றிற்கு ரூ.16க்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தேங்காய் ஒன்று ரூ.7க்கு மட்டுமே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.

    மேலும் தற்போது இப்பகுதியில் திருவிழாக்கள், விசேஷங்கள் அனைத்தும் முடிந்து விட்டதால் தேவையும் குறைந்து விட்டது.

    இதனால் போதிய விலை நிர்ணயம் இல்லாததால் தேங்காய் வெட்டுபவர்கள் இறக்குபவர்கள் கூலிக்கு கூட கட்டு படியாக வில்லை என்று பல தோப்புகளில் தேங்காய்களை மரங்களிலேயே வெட்டாமல் விட்டுள்ளனர்.

    முறையாக 48 நாட்களில் இருந்து 54 நாட்களுக்குள்

    தேங்காய் மரத்திலிருந்து இறக்கப்பட்டால் தான் அடுத்து புதிய தேங்காய் உற்பத்தி ஏற்படும். தற்போது மரத்திலேயே விவசாயிகள் தேங்காயை வெட்டாமல் உள்ளதால் நாளடைவில் உற்பத்தி குறையும்.

    மேலும் உரிக்கப்படும் மட்டைகள் விலைக்குக் கூட கேட்க ஆளில்லாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் தேனி மாவட்டத்தில் போடி சுற்றுப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தி, விவசாயம் செய்துள்ளவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×