search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானங்கள் நிறைவேற்றம்"

    • பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்
    • குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கலந்துகொண்டார். இதில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    10-வது வார்டு உறுப்பினர் ரமேஷ்:-

    2 வருடங்களாக எங்கள் பகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை. பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிப்பது இல்லை. தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் மட்டுமே பிடிக்கப்படுகிறது. இதனால் வாகன விபத்து அதிக அளவில் நடக்கிறது.

    தூய்மை பணியாளர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. வேலை நடக்கும் இடத்தையும் யாரும் பார்வையிடுவதில்லை. வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.

    47-வது வார்டு கவுன்சிலர் எழில்:-

    பராமரிப்பு பணிகளுக்காக பொக்லைன் எந்திரம் கேட்கும் போது, டீசல் இல்லை என்கின்றனர். நாய் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    18-வது வார்டு கவுன்சிலர் சுமதி:-

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடை பயிற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தற்போது அங்கு நடைபயிற்சி ஈடுபட அனுமதிப்பதில்லை.

    எனவே பூங்காக்களை சீரமைத்து அங்கு நடைப்பயிற்சி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தூய்மை பணி செய்யக்கூடிய ஆட்கள் இல்லை. அதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

    28-வார்டு கவுன்சிலர் மம்தா:-

    பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது.

    சமூக விரோதிகள் கூட்டமாக அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காக்களை பராமரிக்க வேண்டும். குப்பை வண்டிகள் அடிக்கடி பழுதாவதால் குப்பை சேகரிப்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது.இதனை சரி செய்து தர வேண்டும்.

    2-வது வார்டு கவுன்சிலர் விமலா:-

    பெரிய புதூர் காலனி பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    6-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன்:-

    எங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் மேடு பள்ளமாக உள்ளது. எனவே சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்றார்.

    45-வது வார்டு கவுன்சிலர் அஸ்மிதா:-

    எங்கள் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குப்பை எரிந்தது. அப்போது திடீரென டிரான்ஸ்பார்மர் பழுதானது. அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போது மின்வாரிய ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார். எனவே இது போன்று குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×