search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மான"

    • பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனகூறி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியக்கு ழுவின் சாதாரண கூட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் உறுப்பினர்கள் கலந்துெகாண்டு பேசினர்.

    கேசவமூர்த்தி (தி.மு.க.):

    அகரப்பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் மின்விளக்கு வசதி வேண்டும்.

    மயில்சாமி (தி.மு.க.):

    வேப்பங்குடி ஆனந்த காவேரி வாய்க்காலில் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும். மனையேரிப்பட்டி கடம்பன்குடி சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    சுப்பிரமணியன் (அ.ம.மு.க.):

    சானூரப்பட்டியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தில் வெளிப்ப டைத்தன்மை இல்லாத சூழ்நிலை உள்ளது.

    தீர்மான புத்தகத்தை எப்போதும் காண்பிப்பதில்லை. தீர்மான புத்தகத்தை உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும்.

    வெங்கடேசன் (பா.ஜ.க.):

    சோளகம்பட்டி ெரயில் நிலைய இணைப்பு பாதை குறித்து தீர்மானம் நிறைவேற்றி தாருங்கள்.

    கென்னடி (பா.ஜ.க.):

    திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ெரயிலை பூதலூரில் நிறுத்த வேண்டும்.

    மதுபாலா (அ.தி.மு.க.): சுரக்குடிபட்டியில் பல மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீர்செய் தர வேண்டும்.

    ரம்யா (தி.மு.க):

    இளங்காடு கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும்.

    தலைவர்:

    வேப்பங்குடி ஆனந்த காவேரி பாலம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.

    பூதலூர் ஒன்றியத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான புத்தகத்தை அதிகாரிகள் படிக்கலாம் காண்பிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு கூறி கூட்டத்தை முடித்து விட்டு தனது அறைக்கு சென்றார்.

    அப்போது தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனக்கோரி பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் அவைக்கூடத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் போராட்டம் நடத்திவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×