search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப கொப்பரை காணிக்கை"

    • அர்த்தநாரீசுவரர்‌ கோவில் நிர்வாகத்திடம்‌ திருச்செங்கோடு ஊர்‌ பொதுமக்கள்‌ சார்பாக, தீப கொப்பரையானது காணிக்கையாக வழங்கப்பட்டது.
    • திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில்‌ தீபம்‌ ஏற்ற வேண்டி மேற்படி தீபக்‌ கொப்பரையை பொதுமக்கள்‌ திருக்கோயில்‌ நிர்வாகத்திடம்‌ வழங்கினார்கள்‌.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் நிர்வாகத்திடம் திருச்செங்கோடு ஊர் பொதுமக்கள் சார்பாக, தீப கொப்பரையானது காணிக்கையாக வழங்கப்பட்டது.

    இந்த தீபக் கொப்பரையானது தாமிர உலோகத்தால் ஆனது இதனை பல வருடங்களுக்கு முன்பாக திருச்செங்கோடு ஊர் பொதுமக்கள் பலரும் சேர்ந்து நன்கொடை வழங்கி இந்த தீப கொப்பரையை உருவாக்கியுள்ள நிலையில், அவர்களின் ஒரு சிலர் இனி வரும் காலங்களில் அர்த்தநாரீசுவரர் கோவில் நிர்வாகமே கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரியதின் அடிப்படையில் கோவில் நிர்வாகம் முன்னின்று வருடா வருடம் தொடர்ந்து திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டி மேற்படி தீபக் கொப்பரையை பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.

    இந்த நிகழ்வில், ஊர்பொதுமக்கள் சார்பாக குமரவேல், திருநாவுக்கரசு, முருகேசன், மனோகர், சக்திவேல், ஆடிட்டர் நிவேதன், ரஜினிகாந்த், சுரேஷ், சரவணன் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

    கோவில் நிர்வாகம் சார்பாக அர்த்தநாரீசுவரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, செயல் அலுவலர் ரமணிகாந்தன், அறங்காவ லர்கள் கார்த்திகேயன், அர்ஜுனன், அருணா சங்கர், பிரபாகரன் ஆகியோர்கள் தீபக் கொப்பரையை பெற்றுக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலிருந்து தீபக் கொப்பரையை 4 ரதவீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து சென்று அர்த்தநாரீசுவரர் கோவிலின் மலை உச்சியில் தீபம் ஏற்றினர்.

    ×