search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திற்பரப்பு"

    • தொடர்ந்து மழை பெய்து வருகிறது
    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் 3-வது நாளாக இன்றும் தடை விதித்து அறிவிப்பு

    நாகர்கோவில், செப். 9-

    குமரி மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மழை இல்லாத நிலையில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்ட த்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள்.

    கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவ தால், அங்கு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் 3-வது நாளாக இன்றும் தடை விதித்து அறிவிப்பு பேனர் வைத்து உள்ளதோடு, அருவி அருகில் செல்லாமல் இருக்க கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1841 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து பாசனத்திற்கு 272 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 4016 கனஅடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.40 அடி யாக உள்ளது. அணைக்கு 691 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.66 அடியாக உள்ளது. அணைக்கு 113 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு

    கிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.76 அடியா கவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத் துறையாறு அணையின் நீர்மட்டம் 38.06 அடியாகவும் உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- (மில்லி மீட்டரில்)

    பேச்சிப்பாறை-10.8, பெருஞ்சாணி-3.4, சிற்றார்-1-3.4, சிற்றார்-2 -2.2, மாம்பழத்துறையாறு-2, புத்தன் அைண-2.8, சுரு ளோடு-1.4, கன்னிமாா்-6.2, பூதப்பாண்டி-1.6, பாலமோா்-7.2, அடையா மடை-3, ஆணைக் கிடங்கு-1.2, கோழிப்போர்

    விளை-2.8.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
    • ரூ.17.32 லட்சம் மதிப்பில் புனரமைப்பு

    கன்னியாகுமரி:

    திருநந்திக்கரை அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.17.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


    இந்தக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மேரி மல்லிகா தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் வகுப்பறை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலர் ராமசுப்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) யசோதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அமுதா, திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ், திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்சன், குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட், குமரி மேற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், குமரி மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், குமரி மேற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜேஎம்ஆர் ராஜா, குமரி மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் சுருளோடு சுரேஷ் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் தினமும் அதிக அளவில் வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் பஸ், வேன், கார், பைக் மூலம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது இதனால் அந்த பகுதியில் உள்ள வணிகர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கிறார்கள் மற்றும் படகு சவாரி நடைபெறும் இடத்தில் நல்ல கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் இங்கு குளித்து முடித்துவிட்டு பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    மாத்தூர் தொட்டில் பாலம் இரு மலைகளுக்கு இடையே விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல காமராஜ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு நடந்து சென்று மலைகளின் அழகை கண்டு களிக்கிறார்கள்.

    அதன் பிறகு கீழ் பகுதிக்கு வந்து ஆனந்த குளியல் போடுகிறார்கள் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறுவர் பூங்காவை சீர மைத்து வைத்து இருக்கி றார்கள். அதில் விளையாடி பொழுதை கழிக்கிறார்கள்.

    ×