search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
    X

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது

    • பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் தினமும் அதிக அளவில் வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் பஸ், வேன், கார், பைக் மூலம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது இதனால் அந்த பகுதியில் உள்ள வணிகர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கிறார்கள் மற்றும் படகு சவாரி நடைபெறும் இடத்தில் நல்ல கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் இங்கு குளித்து முடித்துவிட்டு பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    மாத்தூர் தொட்டில் பாலம் இரு மலைகளுக்கு இடையே விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல காமராஜ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு நடந்து சென்று மலைகளின் அழகை கண்டு களிக்கிறார்கள்.

    அதன் பிறகு கீழ் பகுதிக்கு வந்து ஆனந்த குளியல் போடுகிறார்கள் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறுவர் பூங்காவை சீர மைத்து வைத்து இருக்கி றார்கள். அதில் விளையாடி பொழுதை கழிக்கிறார்கள்.

    Next Story
    ×