search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் கலெக்டர் அலுவலகம்"

    • சிலம்பரசன் கொரடாச்சேரி போலீசில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
    • பட்டப்பகலில் கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கண்கொடுத்தவணிதம் அடுத்த காவாலகுடியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவர் கட்டுமான தொழிலாளியாக உள்ளார்.

    இவர் தனது ஊருக்கு அருகில் உள்ள மேலராதாநல்லூரை சேர்ந்த ஒருவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதில் ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மீதம் ரூ.2 லட்சம் தர வேண்டும் என அவர் சிலம்பரசனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, சிலம்பரசன் கொரடாச்சேரி போலீசில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சிலம்பரசன் அதிருப்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில், மனவேதனையில் இருந்த சிலம்பரசன் இன்று காலை பட்டப்பகலில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாசல் முன்பு அவர் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் ஓடி உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்து இவர் மீது துணியை போர்த்தி தீயை அணைத்தனர்.

    பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சிலம்பரசனின் மனைவி உமாபதி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×