search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில்"

    • இன்றிரவு திருவட்டார் தளியல் ஆற்றில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • தென்தமிழகத்தின் 108 வைணவ கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்.

    கன்னியாகுமரி:

    தென்தமிழகத்தின் 108 வைணவ கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள்.

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசி மாத திருவிழா கடந்த ஞாயிற்றுகிழமை கொடியோற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு 9-ம் திருவிழாவான நேற்று ஆதிகேசவப்பெரு மாளும் திருவம்பாடி கிருஷ்ண சுவாமியும் பள்ளி வேட்டைக்கு எழுந்திருளிய காட்சி நடைபெற்றது.

    இன்றிரவு திருவட்டார் தளியல் ஆற்றில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ×