search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை மனு"

    • ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடனாக பெற்றேன்
    • தேர்தலில் தோல்வியடைந்ததால் மேலும் கடன் கொடுக்க முடியாமல் அவதி அடைந்தேன்

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஏ.டி.எஸ்.பி.க்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன் ஆகியோர் இன்று பொதுமக்களிட மிருந்து மனுக்களை பெற்றனர்.

    சத்துவாச்சாரி ராகவேந்திரா நகரை சேர்ந்த திருநங்கை விஜயபாஸ்கர் சக திருநங்கைகளுடன் வந்து போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;-

    நான் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலராக போட்டியிட்டேன்.

    அப்போது தேர்தல் செலவிற்காகவும், எனது சொந்த செலவிற்காகவும் ரங்கா புரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10,65100 கடனாக பெற்றேன். பின்னர்தேர்தலில் தோல்வியடைந்தேன் மேலும் கடன் கொடுக்க முடியாமல் அவதி அடைந்தேன்.

    கொடுத்த நபர் தினமும் ஆட்களை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுகிறார். எனது வீட்டில் என் பாகத்தையும், என் தாயின் பாகத்தையும் தற்சமயம் பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்டார்.

    நாங்களும் அவ்வாறு செய்து கொடுத்தோம்.தற்போது நான் ரூ.15 லட்சத்தை அவரிடம் அளித்தேன். இருப்பினும் எங்கள் மேல் பத்திர பதிவு செய்ய மறுக்கிறார். இதனால் போலீசார் என்னுடைய சொத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ரங்கா புரத்தை சேர்ந்த வினோத் என்ற நபர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு மூலக்கொல்லை பகுதியில் விவசாய நிலம் உள்ளது.

    அந்த நிலத்திற்கு பக்கத்து நிலத்தை சேர்ந்த நபர் சொந்தம் கொண்டாடி தகராறு செய்து வருகிறார். பல தடவை நிலத்தை அளந்து கொடுத்தும் மீண்டும் தகராறு செய்கிறார்.

    எங்களது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த வேர்க்கடலை செடிகளை பறித்து சென்று விட்டார். மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.

    ×