search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட முயற்சி"

    • விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சாரதி சாலையோரமாக நிறுத்திவிட்டு வேலை பார்த்து அசதியில் லாரியில் படுத்து உறங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பேறங்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் சாரதி லாரி டிரைவர். இவர் நேற்று வழக்கம் போல் லாரியில் வேலைக்கு சென்றார். பின்னர் லாரியை விழுப்புரத்தில் இருந்து புதுவை செல்லும் வழியில் உள்ள ராகவன் பேட்டை அருகே சாலையோரமாக நிறுத்திவிட்டு வேலை பார்த்து அசதியில் லாரியில் படுத்து உறங்கினார். அப்போது அதிகாலை யில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் லாரியில் உறங்கிக் கொண்டிருந்த சாரதியிடமிருந்து செல்போனை திருட முயற்சித்தார்.

    அப்போது திடுக்கிட்டு எழுந்த டிரைவர் சாரதி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து நெடுஞ்சாலை துறை போக்குவது போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த நபர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஸ்ரீகுமார் (வயது 19) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் விரட்டி சென்றனர்.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவு

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் வேந்தன் தெருவில் வசித்து வருபவர் சசிகலா. நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இரவு 11.30 மணி அளவில் இவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் ஒருவர் வந்தார். வீட்டிற்கு வெளியே நின்று இருபுறமும் பார்த்துவிட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தார்.

    சத்தம் கேட்டு கண்விழித்த சசிகலா குடும்பத்தினர் வாலிபர் வீட்டுக்குள் நுழைய முயன்றதை கண்டு அலறி கூச்சலிட்டனர். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் வெளியே குதித்து தப்பி ஓடினார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும் அவரை விரட்டி சென்றனர். ஆனாலும் பிடிக்கமுடியவில்லை. இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் .

    அதில் வாலிபர் சசிகலாவின் வீட்டு சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகளும் தப்பி ஓடியது பதிவாகியுள்ளது. வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

    சேண்பாக்கம் பகுதியில் இது போன்று தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.

    ×