search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட முயன்ற வாலிபர் கைது"

    • நள்ளிரவில் வீடுகளை தட்டி திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த பெருமாள் மகன் பிரபு (வயது25). இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளது. இதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளி வந்துள்ளார்.

    நேற்று இரவு வேடசந்தூர் புதுப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டு ஜன்னலை திறந்து எட்டி பார்த்தார். அவர்கள் சுதாரித்து உடனடியாக வெளிேய வந்ததால் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் ராமகவுண்ட ன்பட்டியை சேர்ந்த கந்தவேல் என்பவரது வீட்டிலும் கதவை தட்டி நோட்டமிட்டார். அவர்களும் உடனடியாக கதவை திறந்ததால் அங்கிருந்து ஓடி விட்டார்.

    பின்னர் ரெட்டியார்ச த்திரம் அடுத்துள்ள தாதன்கோட்டையில் திறந்து இருந்த ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து பணம் அல்லது பொருட்கள் உள்ளதா? என தேடி பார்த்தார். அதற்குள் அவர்கள் விழித்துவிடவே அவர் தப்பி ஓட முயன்றார்.

    இருந்தபோதும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி பிரபுவை பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×