search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருஞானசம்பந்த சுவாமி"

    • பழனி சண்முக சுந்தரதேசிகா், கரூா் ஓதுவாா் சுவாமிகள் சுவாமிநாததேசிகா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
    • முக்திப்பதிகம் பாடி, அவிநாசியப்பா் திருவடிகளில் ஜோதியாய் கலக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    அவினாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை விழாவிற்கு பழனி சண்முகசுந்தரதேசிகா், கரூா் ஓதுவாா் சுவாமிகள் சுவாமிநாததேசிகா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் திருஞானசம்பந்தா் திருக்கோயில் பிரகார உலா வருதல், 'காதலாகி கசிந்து' என்ற முக்திப்பதிகம் பாடி, அவிநாசியப்பா் திருவடிகளில் ஜோதியாய் கலக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், கூட்டு வழிபாடு, மகாதீபாராதனையுடன் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தமிழ்வேள்வியும், திருமுறைகண்ட விநாயகா், நால்வா் பெருமக்கள், அம்மையப்பன் ஆகியோருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் அரசு தேவார இசைப்பள்ளி ஆசிரியா் ராஜூபதி, அவிநாசி ஓதுவாா் சுவாமிகள் சங்கா், சரவணம்பட்டி கெளமார மடாலய தலைமை ஓதுவாா் கணேசன், கரூா் மாவட்ட அரசு தேவார இசைப்பள்ளி மாணவா்கள், தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவாமூா்த்திகள், பக்கவாத்திய கலைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    ×