search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர் சிவந்தி அகாடமி"

    • பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
    • விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7,700-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சானல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி அதிகாரி பணிக்கான தேர்வை எழுத விரும்புகிறவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் வருகிற 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 33 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயது வரையிலும் எழுதலாம்.

    கிளார்க் பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 28 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் எழுதலாம்.

    வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளுக்கான தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, மொத்தம் 25 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பயிற்சியின்போது மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படுகிறது.

    பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,000 ஆகும்.

    பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7,700-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ரூ.7,000-க்கான வங்கி வரைவோலை (கனரா வங்கி/ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/ பாரத ஸ்டேட் வங்கி/ இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம்' என்ற முகவரிக்கு தங்களது புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாகவும் இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம்.

    அதன் பின்னர் பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

    சிவந்தி அகாடமியில் மத்திய, மாநில அரசு பணிகளில் சேர நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2, எஸ்.எஸ்.சி. மற்றும் வங்கி பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புகிறவர்கள் 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.

    ×